உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் சத்யம் சுந்தரம் ஆக மாறிய மெய்யழகன்!

தெலுங்கில் சத்யம் சுந்தரம் ஆக மாறிய மெய்யழகன்!


'96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'மெய்யழகன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதனை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, ஸ்வாதி கொண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 27ந் தேதி அன்று வெளியாவதையொட்டி நேற்று திடீரென இதன் டீசர் ஒன்றை வெளியிட்டனர் இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

நேற்று விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மெய்யழகன் பட தெலுங்கு பதிப்பிற்கு ' சத்யம் சுந்தரம்' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்தனர். கார்த்தி படங்களுக்கு எப்போதும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நல்ல வரவேற்பைப் மக்கள் தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !