உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் படத்தை தொடர்ந்து சூர்யா படத்திலும் பிரசாந்த்?

விஜய் படத்தை தொடர்ந்து சூர்யா படத்திலும் பிரசாந்த்?

நடிகர் பிரசாந்த் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அதன்பிறகு அவருக்கு ஏற்பட்ட சில பிரச்னைகளால் சினிமாவில் அவரால் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. சமீபத்தில் பிரசாந்த் நடித்து, வெளிவந்த ‛அந்தகன்' திரைப்படம் அவருக்கு கம்பேக் படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரசாந்த் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !