ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்திற்கு சிம்பு நிதியுதவி
ADDED : 400 days ago
ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் பெய்த கடும் மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது. தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள் பலரும் தலா 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்கள்.
அதே தமிழ் சினிமா நடிகர்களிலிருந்து முதல் உதவியாக சிம்பு ஆறு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். மற்ற எந்த தமிழ் நடிகரும் உதவுவதற்கு முன்பாகவே சிம்பு இந்த உதவியை இரண்டு வாரங்களுக்கு முன்பே தந்துவிட்டாராம்.
தொடர்ச்சியாக அங்கு படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் சில தமிழ் நடிகர்களுக்கு மத்தியில் சிம்பு தந்த உதவியை அங்குள்ள தெலுங்குத் திரையுலகினர் பாராட்டியுள்ளதாகத் தகவல்.