13 வருட காதல்! காதலியை கரம்பிடித்த அவினாஷ்
ADDED : 393 days ago
சின்னத்திரை நடிகரான அவினாஷ், அழகு, கயல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடன திறமையையும் வெளிப்படுத்தியிருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவினாஷுக்கும் மரியா ஜோசப் என்பவருக்கும் நேற்று தினம் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவினாஷ், தனது 13 வருட காதல் கைகூடியதை நினைத்து மகிழ்ச்சியுடன் போஸ்ட் போட்டுள்ளார். அதைபார்த்து சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.