ஸ்பெயின் பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு
ADDED : 568 days ago
விடாமுயற்சி படத்துடன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்கிற படத்திலும் நடித்து வருகிறார் அஜித். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார்.
ஏற்கனவே இதன் இரண்டு கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிவடைந்தது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் துவங்குகிறது. அங்கு 70 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் பெரும்பாலும் சண்டை காட்சிகள் மற்றும் சில பாடல் காட்சியினை படமாக்கவுள்ளனர் என்கிறார்கள். விரைவில் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் ஸ்பெயின் பறக்க உள்ளனர்.