மீண்டும் தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரண்
தனுஷ் நடிப்பு, இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான ராயன் படம் வெற்றி பெற்றது. தற்போது குபேரா உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் மீண்டும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். முற்றிலும் இளஞர்கள் நடிக்கும் இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான கோல்டன் ஸ்பாரோ பாடலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கி, நடிக்கிறார் என்றும், இதன் படப்பிடிப்பு தேனியில் தொடங்கி உள்ளதாகவும் சொல்கிறார்கள். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சீனியர் நடிகர்களான ராஜ் கிரண் மற்றும் சத்யராஜ் இருவரையும் தனுஷ் நேரில் சந்தித்து கதை கூறி நடிக்க சம்மதம் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ராஜ் கிரண் உடன் வேங்கை படத்தில் அவரது மகனாக நடித்தார் தனுஷ். மேலும் தனுஷ் இயக்கிய ப.பாண்டி படத்திலும் ராஜ் கிரண் முதன்மை வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.