உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி

பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி

ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி தனது 30வது படமாக 'பிரதர்' எனும் படத்தில் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, பிரியங்கா மோகன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்கா, தம்பி சென்டிமென்ட் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை தினத்தையொட்டி வெளியாவதை ஒட்டி இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜெயம் ரவி தன் சம்பந்தப்பட்ட படக் காட்சிகளின் முழு டப்பிங் பணிகளையும் நிறைவு செய்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !