‛தி கோட்' - ஜீவனுக்கு முதலில் உருவாக்கிய விஜய்யின் தோற்றம் வைரல்
ADDED : 401 days ago
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வாரத்தில் திரைக்கு வந்த திரைப்படம் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்டோர் நடித்தனர். யுவன் இசையமைத்தார். இந்த படத்திற்கு விமர்சனங்கள் முன்ன பின்ன இருந்தாலும் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசூல் நன்றாகவே உள்ளது.
இந்த படத்தில் விஜய் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். இதில் ஜீவா என்கிற தோற்றம் மற்றும் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. வெங்கட் பிரபு அளித்த ஒரு பேட்டியில் இதில் ஜீவா எனும் கதாபாத்திரத்தில் விஜய்க்கு முதலில் உருவாக்கப்பட்ட தோற்றம் வேறொன்று எனக் கூறி அந்த போட்டோவை காண்பித்தார். விஜய்யின் அந்த லுக் சமூக வலைதளங்களில் வைரலானது.