அரசியல் பேசும் சசிக்குமாரின் நந்தன் : டிரைலர் வெளியானது
ADDED : 397 days ago
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, மாதேஷ், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் நந்தன். முழுக்க முழுக்க அரசியல் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு சாமானியன் அரசியலுக்கு வந்தால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அரசியல் தலைவர்கள் அவர்களை வைத்து எப்படிப்பட்ட தில்லு முல்லு ஆட்டங்களை எல்லாம் ஆடுவார்கள் என்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
அதோடு, ‛‛போட்டி இல்லை என்பது பெருமை இல்லை, போட்டி இருந்தால்தான் ஜனநாயகத்திற்கு பெருமை..., ஆளுறதுக்குதான் அதிகாரம் தேவைன்னு நினைச்சேன் இப்பதான் தெரியுது வாழ்வதுக்கே இங்கே அதிகாரம் தேவைன்னு...'' என்பது மாதிரியான அரசியல் சார்ந்த அழுத்தமான வசனங்களும் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளது.