உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி என்ற ஒரு பெயருக்காகதான் நடிக்கிறேன் : கன்னட நடிகர் உபேந்திரா

ரஜினி என்ற ஒரு பெயருக்காகதான் நடிக்கிறேன் : கன்னட நடிகர் உபேந்திரா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் நடிப்பது குறித்து கன்னட நடிகர் உபேந்திரா கூறுகையில், கூலி படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை சந்தித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதை சொன்னார். அப்போது அவரிடத்தில், ரஜினி சார் வரும் காட்சிகளில் அவருடன் நானும் இருக்க வேண்டும். அது ஒன்று எனக்கு போதும். அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. ரஜினி என்ற ஒரே ஒரு பெயருக்காக மட்டுமே இந்த படத்தில் நான் நடிக்கிறேன். அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான். மற்றபடி பணத்துக்காக எல்லாம் நடிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் உபேந்திரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !