உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தி படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்

ஹிந்தி படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையாளர் ராகவா லாரன்ஸ். தற்போது ‛அதிகாரம், துர்கா' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரின் 25வது படம் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனை தெலுங்கில் கில்லாடி, வீரா போன்ற படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாகிறது. இந்த நிலையில் இத்திரைப்படம் சமீபத்தில் ஹிந்தியில் வெளிவந்த 'கில்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என கூறப்படுகிறது. அதிரடி ஆக் ஷன் படமான இதை இரு மொழி ரீமேக்கிலும் லாரன்ஸே நடிக்கின்றாராம். மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !