இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா
ADDED : 353 days ago
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'கங்குவா' என்கிற படத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஆக் ஷன் கலந்த பேண்டஸி படமாக பிரமாண்ட பொருட் செலவில் உருவாக்கி உள்ளனர்.
இப்படம் வருகின்ற அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிப்பு வந்தது. ஆனால் ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதால் இதன் ரிலீஸை நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் கங்குவா படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தற்போது சூர்யாவும் இணைந்து உள்ளார். இதை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் போட்டோ உடன் பகிர்ந்துள்ளனர்.