அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின்
ADDED : 390 days ago
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அஜித் குமாருடன் இயக்குனர் நெல்சன், நடிகர் கவின் ஆகியோர் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் வைரலாகி வந்தது. இந்த நிலையில், பத்து நொடிகள் மட்டுமே நடந்த அந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் நடிகர் கவின் . அவர் கூறுகையில், இயக்குனர் நெல்சனும், நானும் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அதேவழியாக அஜித் சாரும் வந்தார். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு பத்து நொடிகள் தான் சந்தித்திருப்போம். அவரை பார்த்த அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து நாங்கள் வெளி வருவதற்குள் அவர் பை என்று சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டார். இந்த சந்திப்பு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தருணமாக அமைந்திருக்கிறது என்கிறார் கவின்.