மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
347 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
347 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
347 days ago
திருப்பதி கோவில் லட்டு விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற 'மெய்யழகன்' படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கார்த்தியிடம் 'லட்டு' பற்றி பேச ஆரம்பித்தார். ஆனால், கார்த்தி, 'லட்டு பற்றி பேச வேண்டாம். அது சென்சிட்டிவ்வான விஷயம்,” என்று சிரித்தபடி பேசினார்.
அதற்கு ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அதன்பின் நடிகர் கார்த்தி வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
நேற்று இரவு பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில், கார்த்தி மற்றும் 'மெய்யழகன்' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “உங்களது அன்பான எண்ணத்தையும், விரைவான பதிலையும் எங்களது மரபுகளுக்கு நீங்கள் காட்டிய மரியாதையையும் நான்மனதாரப் பாராட்டுகிறேன். திருப்பதி மற்றும் அதன் வணக்கத்திற்குரிய லட்டுகள் போன்ற நமது புனித நிறுவனங்களைப் பற்றிய விஷயங்கள் மில்லியன் கணக்கான பக்தர்களுக்கு ஆழ்ந்த உணர்ச்சிகரமான முக்கியத்துவம் கொண்டுள்ளவை. மேலும், இது போன்ற விஷயங்களை நாம் அனைவரும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம்.
எந்த நோக்கமும் இல்லாமல் இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். மேலும் நிலைமை தற்செயலாக இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். குறிப்பாக நாம் மிகவும் மதிக்கும் நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீக விழுமியங்கள், ஒற்றுமை மற்றும் மரியாதையை வளர்ப்பது பொது நபர்களாகிய நமது பொறுப்பு. சினிமா மூலம் தொடர்ந்து ஊக்கமளிக்கும் அதே வேளையில் இந்த விழுமியங்களை உயர்த்த எப்போதும் பாடுபடுவோம்.
அர்ப்பணிப்பும் திறமையும் தொடர்ந்து நம் சினிமாவை வளப்படுத்திய ஒரு குறிப்பிடத்தக்க நடிகராக உங்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூர்யா காரு, ஜோதிகா காரு, ஒட்டுமொத்த குழு, ஆகியோருக்கு 'மெய்யழகன், சத்தியம் சுந்தரம்' வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன். இது பார்வையார்களிடையே சென்று பலருக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பவன் கல்யாணின் வாழ்த்திற்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
347 days ago
347 days ago
347 days ago