மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
348 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
348 days ago
மலையாளத்தில் வெளியான மாயநதி படம் மூலம் ரசிகர்களிடம் வெளிச்சம் பெற்றவர் ஐஸ்வர்ய லட்சுமி. அதன் பிறகு தமிழில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தனக்கான ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கி வருகிறார் ஐஸ்வர்ய லட்சுமி. அதே சமயம் மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வரும் அவர் தற்போது ஹலோ மம்மி என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் தான் இந்த படத்திற்கான தனது டப்பிங் பணியையும் முடித்தார் ஐஸ்வர்ய லட்சுமி.
மேலும் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடி அவர்களது கேள்விகளுக்கு பதில் அளிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி. அப்படி சமீபத்தில் நடைபெற்ற உரையாடலில் ஒரு ரசிகர் அவரிடம் நீங்கள் ஏதாவது ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்களா என்று ஒரு கேள்வியை வெளிப்படையாகவே கேட்டார். அதற்கு சாமர்த்தியமாக பதில் அளித்த ஐஸ்வர்ய லட்சுமி, “இது போன்ற கேள்வியைத்தான் பலரும் கேட்கிறீர்கள். நான் மகிழ்ச்சியான சிங்கிளாக இருக்கிறேன். அதனால் தயவு செய்து என்னை டபுள் ஆக்க முயற்சிக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
348 days ago
348 days ago