உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அரசன்' படத்தில் இருந்து விலகினாரா விஜய்சேதுபதி?

'அரசன்' படத்தில் இருந்து விலகினாரா விஜய்சேதுபதி?


வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். கோவில்பட்டி அருகில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. விஜய் சேதுபதிக்கு கவுரவ வேடமா? வில்லனா? இரண்டு ஹீரோக்களில் ஒருவரா? என்பது குறித்து யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார். அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப்போகிறார். அந்த படத்துக்கு கால்ஷீட் பிரச்னை வருவதால் வெற்றிமாறன் படத்தில் இருந்து வெளியே வருகிறார். 'விடுதலை' படத்துக்கு சில நாட்கள் கால்ஷீட் என்று சென்றார். பல மாதங்கள் அவரை வைத்து படம் எடுத்தார் வெற்றிமாறன். இந்த படமும் அந்த மாதிரி இழுக்க வாய்ப்புள்ளது. அதனால், வெளியேறிவிட்டார் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை விஜய் சேதுபதி விலகியது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஒரு தரப்போ அவர் அரசன் படத்தில் இருக்கிறார். சிலர் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புகிறார்கள். மணிரத்னம் படம் குறித்து இன்னமும் அறிவிப்பே வரவில்லை. அவருக்கு கால்ஷீட் பிரச்னை எதுவும் இல்லை என்கிறார்கள். விஜய் சேதுபதி இது குறித்து ஏதாவது சொன்னால்தான் உண்மை தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !