மேலும் செய்திகள்
நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2'
347 days ago
செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு
347 days ago
'கம் பேக்' இந்த வார்த்தை சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை. அதுவும் இன்றைய சமூக வலைத்தளங்களில் இவருக்கு 'கம் பேக்', அவருக்கு 'கம் பேக்' என அவர்களது படங்களும், இவர்களது படங்களும் நன்றாக அமைந்துவிட்டால் அப்படிக் குறிப்பிட்டு பேச ஆரம்பித்து விடுவார்கள்.
நாளை வெளியாக உள்ள படங்களில் 'மெய்யழகன்' படம் மூலம் கார்த்தி, 'ஹிட்லர்' படம் மூலம் விஜய் ஆண்டனி, 'பேட்ட ராப்' படம் மூலம் பிரபுதேவா ஆகியோர் கம் பேக் கொடுப்பார்களா என ரசிகர்களும், திரையுலகினரும் எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு தோல்வி வந்தாலே ஒரு ஹீரோவின் மார்க்கெட் 'சட்'டென இறங்கிவிடும். அது போல சிலர் அடுத்தடுத்து தோல்விப் படங்களைக் கொடுத்தாலும் எப்படியோ சமாளித்து தொடர்ந்து படங்களில் நடித்து வருவார்கள். இதற்கு முன்பு ஒரு படம் தோல்வி கொடுத்த கார்த்தியும், அடுத்தடுத்து சில படத் தோல்விகள் கொடுத்த விஜய் ஆண்டனி, பிரபுதேவா இருவருக்கும் நாளைய வெளியீடுகள் முக்கியமானவை.
'கம் பேக்' ஆக இருக்கிறதோ இல்லையோ, 'டவுன்' ஆக இல்லாமல் இருந்தாலே இன்றைய நிலவரத்தில் போதுமானது.
347 days ago
347 days ago