மலேசியாவில் ரசிகையுடன் மேடையில் நடனமாடிய சாய் பல்லவி!
ADDED : 387 days ago
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள படம் அமரன். அக்டோபர் 31ம் தேதி திரைக்கு வரும் இந்த படம் மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையை தழுவி உருவாகி இருக்கிறது. இப்படத்தில் மேஜர் முகுந்தன் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், அவரது மனைவி ரெபேக்கா வர்க்கீசாக சாய் பல்லவியும் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மலேசியாவில் அமரன் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஒரு ரசிகை மேடையில் சாய் பல்லவி உடன் நடனம் ஆட வேண்டும் என்று ஆசைப்பட்டதை அடுத்து தன்னுடைய ஒரு ஹிட் பாடலுக்கு அவருடன் இணைந்து சிறிது நேரம் நடனமாடியுள்ளார் சாய் பல்லவி. இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.