மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
340 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
340 days ago
மலையாள திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளவர் நடிகர் நிவின்பாலி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாள திரையுலகில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை அங்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டியது. இதனை தொடர்ந்து நடிகைகள் பலர் பிரபலங்கள் மூலம் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் அளித்து வருகின்றனர்.
அப்படி நடிகை ஒருவர், நடிகர் நிவின்பாலி தன்னை துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சமீபத்தில் அவர் மீது புகார் அளித்தார். அதே சமயம் நடிகர் நவீன்பாலி இந்த குற்றச்சாட்டு குறித்து மறுத்ததுடன் இதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய சதி இருப்பதாக நான் நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இவர் மீதான புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துவங்கி உள்ளது.
இதனை தொடர்ந்து இந்த குழுவினர் முன்பு நேரில் ஆஜரான நிவின்பாலி இது குறித்து கூறும்போது, தன் மீது கூறப்பட்டுள்ள புகார் ஜோடிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும் நடிகையின் புகாரில் குறிப்பிட்ட சம்பந்தப்பட்ட நாளில் தான் துபாயில் இல்லை என்றும் கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட படங்களை சேர்ந்த இயக்குனர்கள் கூட ஆதாரத்துடன் சமீபத்தில் தகவல்கள் வெளியிட்டனர் என்றும் விசாரணையில் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பிலிருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
340 days ago
340 days ago