விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது!
ADDED : 378 days ago
கோட் படத்தை அடுத்து எச். வினோத் இயக்கும் தனது 69 வது படத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதாபைஜு, பிரியாமணி, நரேன், கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய் 69வது படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதில், இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளராக சத்யம் சூரியன், ஸ்டண்ட் மாஸ்டராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், எடிட்டராக பிரதீப் ராகவ், காஸ்ட்யூம் டிசைனராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று பூஜை நடந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது.