‛வா வாத்தியார்' பட ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!
ADDED : 503 days ago
நடிகர் கார்த்தி நடித்து கடந்த வாரத்தில் திரைக்கு வந்த படம் 'மெய்யழகன்'. இந்த படத்தை தொடர்ந்து தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படமாக 'வா வாத்தியார்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் எம்.ஜி.ஆர் ரசிகர் ஆக கார்த்தி நடித்துள்ளார்.
இதில் ராஜ்கிரண், சத்யராஜ், கிர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தை வருகின்ற டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் வாரமான 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் வெளியிடுவதாக கூறப்படுகிறது .