டோரதியை பாராட்டிய ரஜினிகாந்த் : மகிழ்ச்சியில் மிதக்கும் கார்த்திக் சுப்பராஜ்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் 25ல் வெளியான படம் 'டோரதி'.
இப்படத்தின் வெற்றியை இளையராஜவுடன் கேக் வெட்டி கொண்டாடியதை நேற்று பகிர்ந்து மகிழ்ந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். அடுத்து அவரது அபிமான நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியைதை இன்று பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.
அது குறித்து கார்த்திக் சுப்பராஜ், “தலைவா… அற்புதம், அழகு, அசத்தல்… தலைவருக்கு டோரதி படம் மிகவும் பிடித்திருந்தது. படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாராட்டி ஒரு மணி நேரம் விரிவாகப் பேசினார். இதைவிட சிறந்தது வேறென்ன வேண்டும். அந்த உரையாடலையும், அவர் சொன்ன வார்த்தைகளையும் என்றென்றும் நினைவில் கொள்வேன்.
“இந்த கார்த்திக் சுப்பராஜைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். உங்களுக்கு என் சல்யூட்,”..... என சொன்னதும் மகிழ்ச்சியில் மிதக்கிறேன்…. உங்களை நேசிக்கிறேன் தலைவா,” என பதிவிட்டுள்ளார்.