உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2, ரணபாலி : அடக்கி வாசிக்க படக்குழுவினர் முடிவு

ஜெயிலர் 2, ரணபாலி : அடக்கி வாசிக்க படக்குழுவினர் முடிவு

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு சில நாட்கள் முன்னதாகவே அக்டோபர் 15ல் தமிழில் 'ஜெயிலர் 2' படமும், அக்டோபர் 16ல் தெலுங்கில் 'ரணபாலி' படமும் வெளியாவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக இருக்கின்றன.

இரண்டு படங்களுமே பான் இந்தியா படங்களாகத்தான் வெளியாகின்றன. இருப்பினும், இந்த இரண்டு படங்களின் புரமோஷன்களையும் படக்குழுவினர் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சமீபத்தில் வெளியான 'டாக்சிக்' படம் ஏற்படுத்திய பாதிப்புதான் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். பெரிய அளவில் பேசப்பட்டு அந்தப் படம் கடைசியில் படுதோல்வியை அடைந்தது. அதனால், ஏற்பட்ட நூற்றுக்கணக்கான கோடி நஷ்டம் குறித்து இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

'ஓவர் ஹைப்' ஏற்றி விட்டு ரசிகர்களைத் திருப்திப்படுத்த முடியாமல் போவதை விட, எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வந்து ரசிக்கட்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !