உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கணவருடன் இத்தாலி நாட்டுக்கு ஹனிமூன் சென்ற நடிகை மேகா ஆகாஷ்

கணவருடன் இத்தாலி நாட்டுக்கு ஹனிமூன் சென்ற நடிகை மேகா ஆகாஷ்


'எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை, யாதும் ஊரே யாவரும் கேளீர், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்' என பல படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ். இவர் சமீபத்தில் தனது காதலரான சாய் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார். இவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்த திருநாவுக்கரசரின் மகன் ஆவார்.

திருமணத்திற்கு பிறகு டில்லி சென்று காங்கிரஸ் கட்சியின் ராகுலை, சாய் விஷ்ணுவும் மேகா ஆகாசும் சந்தித்து ஆசி பெற்றார்கள். இந்நிலையில் தற்போது அவர்கள் ஹனிமூனுக்காக இத்தாலி நாட்டுக்கு சென்றுள்ளார்கள். அங்கு தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டுள்ளார் மேகா ஆகாஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !