69வது படத்திற்காக விஜய் பின்னணி பாடிய ஒன் லாஸ்ட் சாங்!
ADDED : 414 days ago
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள பையனூரில் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு அனிருத் இசையில் உருவாகியுள்ள 'ஒன் லாஸ்ட் சாங்' என்று தொடங்கும் பாடலுக்கு 500 நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி இருக்கிறார் விஜய். இந்த பாடலை ஏற்கனவே விஜய்க்காக 'நான் ரெடிதான்' என்ற பாடலை எழுதிய அசல் கோளார் எழுதி இருக்கிறார். இந்த பாடல் விஜய் 69வது படத்தின் ஓப்பனிங் பாடலாக அமைந்திருப்பதால் ரசிகர்கள் தியேட்டரில் எழுந்து ஆட்டம் போடக்கூடிய அளவுக்கு துள்ளலான இசையில் கம்போஸ் செய்திருக்கிறார் அனிருத்.