'சிறகடிக்க ஆசை' முத்துவுக்கு நிச்சயதார்த்தம்! பொண்ணு யார் தெரியுமா?
ADDED : 412 days ago
சிறகடிக்க ஆசை தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வெற்றி வசந்த். சின்னத்திரையின் விஜய் சேதுபதி என பெயர் வைக்குமளவிற்கு ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ள இவர், சில தினங்களுக்கு முன் விரைவில் நல்ல செய்தி சொல்லப்போவதாக பதிவிட்டிருந்தார். அதன்படியே தற்போது வெற்றி வசந்த் தனது காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அது வேறு யாருமல்ல பொன்னி சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் வைஷ்ணவி தான். இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வெற்றி வசந்த் இந்த வாரத்திலேயே தங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.