சீனிவாசன் இயக்கும் 'பவர் லட்டு'
ADDED : 403 days ago
அக்குபஞ்சர் வைத்தியரான சீனிவாசன் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் தானே தயாரித்த 'லத்திகா' என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். தன்னை 'பவர் ஸ்டார்' என்று அவரை அழைத்துக் கொண்டார்.
சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தில் நடித்ததன் மூலம் மேலும் புகழ்பெற்றார். அதன்பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்தவர் இடையிடையே மோசடி வழக்குகளில் சிறைக்கும் சென்று வந்தார்.
இந்த நிலையில் 'பவர் லட்டு என்ற புதிய படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தை எல்.வி கிரியேஷன் சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கின்றார். கதை திரைக்கதையை கார்த்திக் காமராஜ் எழுதியுள்ளார். வினோத் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள வசந்த், மோகன்ராஜ் இசையமைக்கின்றார்.