மும்பையில் 'ஸ்ரீதேவி சவுக்' திறப்பு
ADDED : 327 days ago
தமிழ் நடிகையான ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார். 2018ம் ஆண்டு துபாயில் நடந்த ஒரு விழாவுக்கு சென்ற ஸ்ரீதேவி அங்கு குளியல் அறையில் தவறி விழுந்து இறந்தார். ஸ்ரீதேவி நினைவாக அவர் வாழ்ந்த லோகந்த் வாலாவில் உள்ள ஒரு பகுதிக்கு 'ஸ்ரீதேவி சவுக்' என்று பெயரிடப்படும் என்று மும்பை மாநகராட்சி அறிவித்திருந்தது.
அவர் இறந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு, லோகந்த் வாலாவில் 'ஸ்ரீதேவி கபூர் சவுக், திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது இளைய மகள் குஷி கபூர் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.