உலக சாதனை படைத்த குக் வித் கோமாளி புகழின் மகள்
ADDED : 408 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். இன்று சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். புகழ் இரண்டு வருடங்களுக்கு முன் தனது காதலி பென்ஸியை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவருக்கு தற்போது 1 வயது கூட நிரம்பாத ரிதன்யா என்கிற மகள் இருக்கிறார். 11 மாதங்களே ஆன ரிதன்யா 2 கிலோ டம்புளை 17 வினாடிகள் இடைவிடாது பிடித்து சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இதனையடுத்து புகழ் - பென்ஸி தம்பதியினருக்கும் ரிதன்யா பாப்பாவிற்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.