உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரியங்கா சோப்ரா கதை : துஷாரா ஆசை

பிரியங்கா சோப்ரா கதை : துஷாரா ஆசை

சார்பட்டா பரம்பரை, அநீதி, ராயன் உள்ளிட்ட படங்களில் அழுத்தமான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை துஷாரா விஜயன். சமீபத்தில் வெளியான ரஜினியின் வேட்டையன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து, பாராட்டை பெற்றுள்ளார்.

காதல் பற்றி இவர் அளித்த பேட்டியில், ‛‛காதல் வருமா.... அது அப்பப்ப வரும். சமீபத்தில் கூட ஒரு காதல் வந்தது. எனக்கு நடிகை பிரியங்கா சோப்ராவை பிடிக்கும். அவரின் வாழ்க்கை எந்த மாதிரி இருந்தது என அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளது. அதனால் அவரின் வாழ்க்கை கதையில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு பணம் முக்கியமில்லை, படத்தில் எனது ரோல் வலுவானதாக இருக்க வேண்டும் என நினைப்பேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !