பிரதர் படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ்
ADDED : 512 days ago
எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது 30வது படமாக 'பிரதர்' எனும் படத்தில் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, பிரியங்கா மோகன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அக்கா, தம்பி சென்டிமென்ட் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
வருகின்ற அக்டோபர் 31ந் தேதி தீபாவளி பண்டிகை தினத்தில் படம் வெளியாகிறது. தற்போது இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்ததாக படக்குழு அறிவித்துள்ளனர்.