மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
346 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
346 days ago
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ஏக்தா கபூர். பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா, ஷோபா கபூர் ஆகியோரின் மகள். பாலாஜி டெலி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனராகவும், கிரியேட்டிவ் ஹெட் ஆகவும் உள்ளார். அந்நிறுவனத்திற்குச் சொந்தமாக 'ஆல்ட் பாலாஜி' என்ற ஓடிடி நிறுவனமும் உள்ளது. 2020ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் வென்றவர்.
'ஆல்ட் பாலாஜி' ஓடிடி தளத்தில் 2021ம் ஆண்டில் ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோரது தயாரிப்பில் 'காந்தி பாட்டி' என்ற 'அடல்ட்' நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் மைனர் நடிகையின் ஆபாசமான சில காட்சிகள் இடம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் ஏக்தா, ஷோபா ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட சில பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த ஒடிடி தளத்தில் 'காந்தி பாட்' ஷோ இடம் பெறவில்லை. பெண் தயாரிப்பாளர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
346 days ago
346 days ago