ஆலியா பட் நடித்த 'ஜிக்ரா' படுதோல்வி : 'எக்ஸ்'-ஐ விட்டு விலகிய இயக்குனர்
ADDED : 351 days ago
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'ஜிக்ரா' ஹிந்திப் படம் அக்டோபர் 11ம் தேதி வெளியானது. படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் முதல் நாளிலிருந்தே மிகவும் குறைந்த வசூலையே பெற்று வந்தது.
பாலிவுட்டின் முக்கிய நடிகையான ஆலியா பட் நடிப்பில் கடந்த பத்து வருடங்களில் இப்படி ஒரு தோல்விப் படம் வந்ததில்லை என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதுவரையில் மொத்தமாக 40 கோடிக்கும் அதிகமான வசூல் மட்டுமே கிடைத்துள்ளது என்கிறார்கள்.
இப்படம் பற்றி வரும் நெகட்டிவ் விமர்சனங்களிலிருந்து விடுபட படத்தின் இயக்குனர் வாசன் பாலா எக்ஸ் தளக் கணக்கை 'டீ ஆக்டிவேட்' செய்துவிட்டார். இருந்தாலும் இன்ஸ்டா தளத்தில் தொடர்கிறார்.
ஆலியா பட்டின் அடுத்த படமாக 'ஆல்பா' படம் 2025ல் வெளியாக உள்ளது.