'அமரன்' டிரைலர் நாளை வெளியீடு
ADDED : 354 days ago
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. அக்.,31ம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
'அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே' என்ற வாசகத்துடன் புதிய போஸ்டரை வெளியிட்டு டிரைலர் பற்றிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.