மேலும் செய்திகள்
பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா
318 days ago
'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம்
318 days ago
அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு
318 days ago
ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவகன், கரீனா கபூர், ரன்வீர் சிங், அக்ஷய் குமார், தீபிகா படுகோனே, டைகர் ஷெராப், அர்ஜுன் கபூர், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிங்கம் அகைன்'. ராமாயணக் கதையின் காட்சிகளுடன் இப்படத்தின் கதாபாத்திரங்களை உருவகப்படுத்தி படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். பக்கா ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகி உள்ள இந்தப்படம் தீபாவளியை முன்னிட்டு நவ., 1ல் ரிலீஸாகிறது. இப்படத்தில் சர்ப்ரைஸாக நடிகர் சல்மான் கான் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.
சல்மான்கான் தபாங்கில் நடித்த சுல்புல் பாண்டே கேரக்டர் தான் இந்த படத்திலும் வர உள்ளது. இதன்மூலம் ரோஹித் ஷெட்டியின் இந்தியாவின் முதல் சினிமா காப் யுனிவர்ஸில் சல்மானும் இணைந்துள்ளார். சல்மான் சுல்புல் பாண்டேவாகவும், அஜய் தேவ்கன் பாஜிராவ் சிங்கமாக திரும்பவும் வருவதால், ரசிகர்கள் அதிக ஆக்ஷன் காட்சிகளை எதிர்பார்க்கலாம். சல்மான் தவிர்த்து படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் இருப்பதால் ரோஹித் ஷெட்டிக்கு, இந்தப் படத்தின் மூலம் இன்னொரு பிளாக்பஸ்டர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
318 days ago
318 days ago
318 days ago