நடிப்பு என்பது விளையாட்டு கிடையாது - நிகிலா விமல்
ADDED : 359 days ago
மலையாள நடிகை நிகிலா விமல் மலையாள சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதை தாண்டி தமிழிலும் சில நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெற்றிவேல், கிடாரி, வாழை ஆகிய படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
சமீபத்தில் நிகிலா விமல் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, நடிப்பு என்பது விளையாட்டு கிடையாது. என் மனப்பூர்வமான சம்மதம் இல்லாமல் எந்தவொரு கதாபாத்திரத்திலும், வசனத்திலும் நடிக்க மாட்டேன். இதில் நான் கவனமாக இருப்பேன். நான் கடுமையான பெண் அல்ல. எந்தவொரு காட்சியின் அவசியத்தை கேட்டு தான் நடிப்பேன். எனது கதாபாத்திரமும், படமும் நல்லபடியாக வரவேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டிருப்பேன். எளிய மக்கள் மத்தியில் நான் பிரபலமாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.