உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இதுதான் சரியான அறிமுகம் - மாளவிகா மோகனன்

இதுதான் சரியான அறிமுகம் - மாளவிகா மோகனன்

மலையாளம், தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் முதல் முறையாக தெலுங்கில் பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தில் அறிமுகமாகிறார். ஹாரர் பாணியில் இந்தப்படம் உருவாகிறது.

தெலுங்கில் அறிமுகமாவது பற்றி மாளவிகா மோகனன் கூறியதாவது, சரியான படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக வேண்டும் என நினைத்து அதற்காக நீண்டகாலமாகக் காத்திருந்தேன். இப்போது பிரபாஸ் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை விட சிறப்பான அறிமுகம் எதுவும் எனக்கு அமையாது என நினைக்கிறேன். அடுத்த வருடம் எப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகிறது. ரசிகர்களைப் போலவே ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !