அர்ஜுனின் சீதா பயணம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
ADDED : 418 days ago
சேவகன், பிரதாப், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, ஏழுமலை, சொல்லி விடவா என பல படங்களை இயக்கியவர் நடிகர் அர்ஜுன். தற்போது ‛சீதா பயணம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அவரது மகளான ஐஸ்வர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நிரஞ்சன் நாயகனாக நடிக்கிறார். அவர்களுடன் சத்யராஜ், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். குடும்பப்பாங்கான கதையில் இந்த படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார் அர்ஜூன். இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.