உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மிக அழகாக நடித்த மீனாட்சி சவுத்ரி! துல்கர் சல்மான் வெளியிட்ட தகவல்

மிக அழகாக நடித்த மீனாட்சி சவுத்ரி! துல்கர் சல்மான் வெளியிட்ட தகவல்


'தமிழில் ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹேய் சினாமிகா' உள்பட பல படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான். தற்போது தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி இணைந்து நடித்த லக்கி பாஸ்கர் என்ற படம் தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் துல்கர் சல்மான் அளித்த ஒரு பேட்டியில், லக்கி பாஸ்கர் படத்தில் நாயகியாக நடித்த மீனாட்சி சவுத்ரியின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், ''இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி நடித்த சுமதி என்ற வேடத்தை அவரை தவிர வேறு எந்த நடிகையும் ஏற்று நடிக்க மாட்டார்கள். அந்த வேடத்தில் அவர் மிக அழகாக நடித்திருந்தார். பெரிய வேடம் என்பதோடு, அதை அவர் முழு மனதோடு ஏற்று நடித்து நிறைவான நடிப்பை கொடுத்து அந்த கதை பாத்திரத்துக்கு உயிரூட்டி இருக்கிறார்,'' என்று மீனாட்சி சவுத்ரியின் நடிப்பை பாராட்டியுள்ளார் துல்கர் சல்மான். இதற்கு முன்பு தெலுங்கில் மகாநடி, சீதா ராமம் போன்ற இரண்டு ஹிட் படங்களில் நடித்த துல்கார் சல்மான் நடிப்பில் தற்போது மூன்றாவதாக இந்த படம் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !