உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நவம்பர் 8ல் ஒரே ஒரு வெளியீடு…

நவம்பர் 8ல் ஒரே ஒரு வெளியீடு…

2024ம் ஆண்டு முடிவடைய இன்னும் எட்டு வெள்ளிக்கிழமைகளே உள்ளன. இந்த எட்டு வெள்ளிக்கிழமைகளில் இந்த வாரம் நவம்பர் 8ம் தேதி ஒரே ஒரு படம்தான் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள. 'இரவினில் ஆட்டம் பார்' என்ற அந்த ஒரே படமும் திட்டமிட்டபடி வெளியாகுமா என்பது படம் வெள்ளியன்றுதான் தெரியும்.

கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு மூன்று படங்கள் வெளிவந்தன. அடுத்த வாரம் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' பெரும்பாலான தியேட்டர்களில் வெளியாக உள்ளது. கடந்த வாரம் வெளியான 'அமரன்' படத்திற்கு நல்ல வரவேற்பு என்பதால் அடுத்த வாரம் வரையிலும் தாக்குப் பிடித்துவிடும். எனவே, இந்த வாரம் படங்களை வெளியிட யாரும் தயாராக இல்லை.

அடுத்த வாரம் 'கங்குவா, பீனிக்ஸ்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அதற்கடுத்த வாரங்களில் சில மீடியம் பட்ஜெட் படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5ல் 'புஷ்பா 2', டிசம்பர் 20ல் 'விடுதலை 2' ஆகிய படங்கள் வெளிவருவதால் இடையில் உள்ள வாரங்களில் கிடைக்கும் தியேட்டர்களைப் பொறுத்து சில படங்கள் வெளியாகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !