மேலும் செய்திகள்
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
305 days ago
கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த்
305 days ago
வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம்
305 days ago
ஊட்டி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியை பூர்வீகமாகக் கொண்டவர் சாய் பல்லவி. கோயம்பத்தூரில் பள்ளிப் படிப்பை முடித்து பின் ஜார்ஜியா நாட்டில் டாக்டருக்குப் படித்தவர். நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தால் 2008ல் 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' என்ற டிவி நடன நிகழ்ச்சியிலும், பின்னர் 'தீ சீசன் 4' என்ற தெலுங்கு டிவி நடன நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.
2015ல் வெளிவந்த 'பிரேமம்' மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட ஒரு படம். ஆனாலும், அடுத்து இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்து அங்கும் பிரபலமான பின் தான் 2018ல் 'தியா' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் 'மாரி 2, என்ஜிகே,' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். அவர் நடித்த மூன்று படங்களுமே கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறவில்லை.
2022ல் முதன்மைக் கதாநாயகியாக நடித்த 'கார்கி' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. இருந்தாலும் வியாபார ரீதியாக பெரிய வசூல் பெறவில்லை. சினிமாவைப் பொறுத்தவரையில் பெரிய ஹீரோக்கள், பெரிய வசூல் ஆகியவைதான் நடிகைகளுக்கும் அதிக வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். ஆனாலும், சாய் பல்லவி அவை பற்றியெல்லாம் கவலைப்படுபவர் இல்லை. அவருக்குப் பிடித்தமான கதை, கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பாராம். பணம் சம்பாதிப்பது முக்கியமில்லை என்று சொல்வாராம்.
இருந்தாலும் முன்னணி ஹீரோக்களான சூர்யா, தனுஷ் ஆகியோருடன் நடித்து கூட அப்படங்கள் வெற்றி பெறவில்லை என்ற ஒரு பேச்சு தமிழ் சினிமாவில் நிலவி வந்தது என்கிறார்கள். தற்போது 'அமரன்' படத்தின் மூலம் கிடைத்துள்ள வெற்றியால் அந்த பேச்சையும் சாய் பல்லவி நிறுத்திவிட்டார். இனி யாரும் அப்படி பேச மாட்டார்கள் என சாய் பல்லவியைப் பற்றித் தெரிந்த திரையுலகினர் சொல்கிறார்கள்.
சினிமாவில் திறமையை விட வெற்றிதான் ஒருவரது ஆற்றல் என்னவென்பதைத் தீர்மானிக்கிறது.
305 days ago
305 days ago
305 days ago