நானி நடிக்கும் 'தி பாரடைஸ்'
ADDED : 375 days ago
தெலுங்கில் தசரா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கத்தில் நானி அவரது 33வது படத்தில் நடிக்கின்றார். இதனை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு அனிருத் இசையமைக்கிறார் என சமீபத்தில் அறிவித்தனர்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு 'தி பாரடைஸ்' என தலைப்பு வைத்துள்ளதாக இன்று டைட்டில் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். மேலும், இந்த தலைப்பின் மூலம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. ஏனெனில் தெலுங்கு சினிமாவில் தெலுங்கு மொழியில் தலைப்பு வைப்பதில் முன்னுரிமை தர வேண்டும் என உறுதியாக உள்ளனர். இதை மீறி கேம் சேஞ்சர், ஜெர்ஸி, கேங் லீடர் போன்ற பல படங்களுக்கு ஆங்கில தலைப்பு வைத்து ஆரம்பத்தில் சலசலப்பு ஏற்பட்டு பின்பு ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.