6 நாட்களில் ரூ.160 கோடி வசூலை எட்டிய அமரன்!
ADDED : 341 days ago
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் 'அமரன்'. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் ஹவுஸ் புஃல் காட்சிகளாக ஓடி வருகிறது.
இந்த நிலையில் இத்திரைப்படம் வெளியாகி 6 நாட்களில் உலகளவில் ரூ.160 வசூலை எட்டியுள்ளது. தமிழகத்தில் சுமார் ரூ.77 கோடி வசூலித்தது என்கிறார்கள். மேலும், இவ்வருடம் தமிழில் வெளிவந்த தி கோட், வேட்டையன் படங்களுக்கு அடுத்த இடத்தில் தற்போது உள்ளது. இதுவரை வெளிவந்த சிவகார்த்திகேயன் படங்களின் வசூலில் உச்சமாக உள்ளது என்கிறார்கள்.