‛டிராகன்'ல் இணைந்த மூன்று இயக்குனர்கள்
ADDED : 340 days ago
‛ஓ மை கடவுளே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஷ்வத் மாரிமுத்து, தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‛டிராகன்' படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக அனுபாமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் நடிக்கின்றனர்.
தற்போது இந்த திரைப்படத்தில் மூன்று இயக்குனர்கள் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, ‛மயில்வாகனன்' கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின், ‛வாலே குமார்' கதாபாத்திரத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், ‛பரசுராம்' கதாபாத்திரத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடிப்பதாக அறிவித்துள்ளனர்.