தாரா நடிகை மீது கோபத்தில் இருக்கும் தளபதி
ADDED : 339 days ago
தளபதி நடிகரின் கடைசி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, தாரா நடிகைக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். ஆனால், மொத்த கதையையும் கேட்ட அவரோ, 'இந்த கதையில் எனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. தளபதி படம் என்பதற்காக, 'ஜூனியர் ஆர்டிஸ்ட்' போன்று நடிப்பதற்கு நான் தயாராக இல்லை...' என்று சொல்லி, தடாலடியாக நடிக்க மறுத்து விட்டார். இப்படி, தன் படத்தில் நடிக்க, தாரா மறுத்து விட்டதால், அவர் மீது செம கோபத்தில் இருக்கிறார், தளபதி நடிகர்.