69வது படம் : வினோத்திற்கு விஜய் போட்ட உத்தரவு
ADDED : 330 days ago
தி கோட் படத்தை அடுத்து வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். அவருடன் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், மமீதா பைஜு, பிரியாமணி ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழகம் முழுக்க சென்று தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டு வருகிறார் விஜய். அதனால் இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடித்துவிட்டு முழுநேர அரசியலில் குதிக்கப் போகிறார். அதன் காரணமாக தனது 69வது படத்தின் படப்பிடிப்புக்கு பெரிய அளவில் பிரேக் கொடுக்காமல் வேகமாக நடத்தி முடிக்குமாறு இயக்குனர் வினோத்திற்கு உத்தரவிட்டுள்ளார் விஜய்.