கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன்
ADDED : 339 days ago
அஜித் நடிப்பில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் சிவா. தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கி இருக்கும் இவர், ஐந்தாவது முறையாக அஜித்தை அடுத்து இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் சிவா இயக்கியுள்ள கங்குவா படம் நவம்பர் 14ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சூர்யாவுடன் இணைந்து தானும் பிரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வரும் இயக்குனர் சிவா தான் அளித்த ஒரு பேட்டியில், கங்குவா படத்தின் டிரைலரை பார்த்த அஜித் குமார், மிக சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் இருப்பதாக தெரிவித்ததாக கூறியுள்ளார்.