அமரன் படம் ஓடிய தியேட்டர் முன்பு வெடிகுண்டு வீச்சு : நெல்லையில் பரபரப்பு
ADDED : 384 days ago
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் அமரன். ரசிகர்களின் வரவேற்பை பெற்று 3வது வாரத்தை கடந்து ரூ.300 கோடி வசூலை நெருங்கி வருகிறது. அதே சமயம் இந்த அமரன் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது போன்று காட்சிகள் இருப்பதாக சொல்லி சமீபத்தில் சில இஸ்லாமிய அமைப்புகள் அமரன் படம் ஓடிய தியேட்டர்களும் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரில் அமரன் படம் ஓடிக்கொண்டிருந்த போது அந்த தியேட்டர் வாசலில் யாரோ மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசியுள்ளார்கள். இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் வெடிகுண்டு வீசிய நபர்களை தேடி வருகிறார்கள்.