மீண்டும் சுயசரிதை எழுத விரும்பும் ரஜினி!
ADDED : 403 days ago
நடிகர் ரஜினிகாந்த் 1975ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி 50 வருடங்களை சினிமாவில் நெருங்கியுள்ளார்.
தற்போது கூலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஜெயிலர் 2ம் பாகத்திலும் ரஜினி நடிக்கவுள்ளார். இதன் பின்னர் ரஜினிகாந்த் தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதை புத்தகமாக எழுதி வெளியிட உள்ளார் என நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். மேலும், பல வருடங்களுக்கு முன்பே ரஜினி சுயசரிதை எழுத முயற்சி செய்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் அதனை கைவிட்டார். இப்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் சுயசரிதை எழுதும் முயற்சியை கையில் எடுத்துள்ளார் ரஜினி.