உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நவம்பர் 29ல் 9 படங்கள் ரிலீஸ்

நவம்பர் 29ல் 9 படங்கள் ரிலீஸ்


2024ம் ஆண்டின் கடைசி கட்டத்தில் இருக்கிறோம். இந்த வருடம் முடிய இன்னும் ஐந்து வாரங்களே உள்ள நிலையில் அதற்குள் பல படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, இந்த ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்துவிட்டது. இன்னும் 30, 40 படங்களாவது வெளியாகும் வாய்ப்புகள் உள்ளது.

கடந்த வாரம் நவம்பர் 22ம் தேதி வெளியான படங்கள் சுமாரான வரவேற்பைக் கூடப் பெறாத நிலையில் இந்த வாரம் நவம்பர் 29ம் தேதி 9 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “அந்த நாள், டப்பாங்குத்து, மாயன், மிஸ் யு, பரமன், சைலண்ட், சாதுவன், சொர்க்கவாசல், திரும்பிப்பார்,” ஆகிய 9 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ள 'மிஸ் யு', ஆர்ஜே பாலாஜி, சானியா ஐயப்பன் நடித்துள்ள 'சொர்க்கவாசல்' ஆகிய இரண்டு படங்கள் தான் ரசிகர்களுக்குத் தெரிந்த நாயகர்கள் நடித்துள்ள படங்கள். இந்த இரண்டு படங்கள்தான் அதிக தியேட்டர்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்தப் படங்கள் வெளியீட்டிற்கு முன்பே ஓரளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற படங்களில் எந்தெந்த படங்கள் வெளிவரும் என்பது அப்போதுதான் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !